ஸ்கூலுக்கு போக சொன்னதால் கழிவறையை கல்லரையாக்கிய சிறுவன்.. சென்னை அருகே பேரதிர்ச்சி
பெற்றோர் திட்டிய மன உளைச்சலில், 12 வயது சிறுவன் தீக்குளித்து த*கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த ஆரம்பாக்கத்தை சேர்ந்த தம்பதி ரிச்சர்ட் - மீனா. தம்பதிக்கு 12 வயதில் தோனி என்ற மகன் இருந்த நிலையில், அவர் ஆத்தனஞ்சேரியில் உள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளிக்கு செல்ல மறுத்தும், படிப்பின் மீது ஈடுபாடு இல்லாமலும் மகன் இருந்ததால், அவரை தம்பதி இருவரும் கண்டித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த சிறுவன், வீட்டு கழிவறையில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து த*கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே, சம்பவம் குறித்தான விசாரணையை கையிலெடுத்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டருகேயுள்ள பெட்ரோல் பங்க்கில், மர்மநபர் ஒருவருடன் பைக்கில் வந்திறங்கிய சிறுவன், வாட்டர் கேனில் பெட்ரோல் வாங்கிச் சென்றது பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரவி வரும் நிலையில், சிறுவனை பைக்கில் அழைத்து வந்த அந்த நபர் யார் எனவும் சிறுவனுக்கு வாட்டர் கேனில் ஊழியர்கள் பெட்ரோல் கொடுத்தது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.