`ரோட்டோரம் படுத்திருந்ததை மக்கள்'... கலெக்டர், SP திடீர் ஆய்வு... பரபரத்த காஞ்சி மருத்துமனை...

x

காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துமனையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட எஸ்.பி. ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக மருத்துவர், செவிலியர் மற்றும் நோயாளிகளுக்கு மேற்கொள்ள வேண்டிய கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து கேட்டறிந்தனர். மேலும், சி.சி.டி.வி. பயன்பாடு மற்றும் மின்விளக்கு குறித்து சோதனையிட்ட மாவட்ட ஆட்சியர், பயன்பாடற்ற நிலையில் இருப்பவற்றை கணக்கிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார். மேலும், நோயாளிகளை பராமரிப்பதற்காக உடன் வந்திருந்தவர்கள் சாலையோரம் படுத்திருந்ததை கண்ட மாவட்ட ஆட்சியர், அவர்களை பாதுகாப்பாக உள் அரங்கில் சென்று தங்குமாறு அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்