நாளை ஆற்றில் இறங்கும் கள்ளழகர்.. இன்று வைகையில் நடந்த மாற்றம்

x

வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 200 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது... 4 நாட்களில் வைகை அணையில் இருந்து மொத்தமாக 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் மதுரையை சென்றடைந்ததைத் தொடர்ந்து தண்ணீரின் அளவு வினாடிக்கு 200 கன அடியாக குறைக்கப்பட்டது. அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் நாளை பிற்பகல் முழுவதுமாக நிறுத்தப்படும் என்றும் அதன் பின்னர் வைகை அணையில் உள்ள தண்ணீரை மதுரை மற்றும் தேனி மாவட்ட குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்