"இப்போ நடத்தியே ஆகணும்" - திமுக - அதிமுகவினர் நடுவே சிக்கிய கமிஷனர் - பரபரப்பு காட்சிகள்
கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில், டெண்டர் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினரும்,டெண்டர் நடத்தக் கோரி திமுகவினரும் நகராட்சி ஆணையரிடம் ஒரே நேரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சியில் இருசக்கர வாகன நிறுத்துமிடம், கட்டண கழிப்பறை, வெளிவட்ட சுங்க கட்டணம் ஆகியவற்றை குத்தகை விடுவதற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில், அதிமுகவைச் சேர்ந்தரின் டெண்டர் மனுவை பெறாமல் அதிமுகவினர் புறக்கணித்ததாக கூறப்படுகிறது. இதனால் டெண்டர் நடத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினரும், நடத்தக் கோரி திமுகவினரும் நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரியிடம் வாக்குவாதம் செய்தனர்.
Next Story