கள்ளக்குறிச்சியில் 59 உயிர்கள் போக காரணமான `மூளைச்சலவை' மாதேஷ் குறித்த அதிர்ச்சி பின்னனி
கள்ளக்குறிச்சியில் 59 உயிர்கள் போக காரணமான `மூளைச்சலவை' மாதேஷ் குறித்த அதிர்ச்சி பின்னனி.. CBCID-யே எதிர்பாரா தகவல்கள்
விஷ சாராய வழக்கில், முக்கிய குற்றவாளியான மாதேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சின்னதுரைக்கு மெத்தனால் கைமாறிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
கள்ளக்குறிச்சி மாவட்டம் விஷ சாராயம் வழக்கில், கைது செய்யப்பட்ட சின்னதுரைக்கு மெத்தனால் கிடைக்க உதவிய மாதேஷை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மாதேஷ் டிப்ளமோ கெமிக்கல் இன்ஜினியரிங் சேர்ந்து, இரண்டு மாதம் மட்டுமே கல்லூரிக்கு சென்றவர். அதன் பின்னர் சின்னதுரையிடம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. தான் கெமிக்கல் இன்ஜினியரிங் படித்தவர் என்பதால், மெத்தனாலை எளிதாக வாங்கி தர முடியும் என சின்னதுரையிடம் கூறியுள்ளார் மாதேஷ். மேலும் சாராயத்தில் மெத்தனால் கலந்தால், கூடுதல் போதை கிடைக்கும் என சின்னதுரையிடம் கூறியுள்ளார். பின்னர் சென்னையை சேர்ந்த சிவகுமாரின் அறிமுகம் கிடைத்த நிலையில் அவர் மூலமாக 3 பேரல் மெத்தனால் வாங்கியுள்ளார் மாதேஷ். இது தவிர ஏற்கனவே 6 பேரல்கள் மெத்தனால் அவரிடம் இருந்துள்ளன. அந்த 9 பேரல் மெத்தனாலையும் சக்திவேலிடம் தந்துள்ளார் மாதேஷ். அவரிடம் இருந்து கதிர் என்பவர் மூலம், ஜோசப் ராஜா, சின்னதுரை, ஷாகுல் ஹமிது ஆகியோரின் கைக்கு சென்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 3 பேரல் மெத்தனால் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், மாதேஷையும், சின்னதுரையையும் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனர். .