விஷ சாராய விவகாரம் அடங்குவதற்குள் நடந்த அதிர்ச்சி.. கைதானவர்களை காப்பாற்ற வந்த முக்கிய புள்ளி

x

கள்ளக்குறிச்சியில் சாராயம் குடித்து 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், தமிழகம் முழுவதும் சட்ட விரோதமாக மது விற்பவர்களை அரசு கைது செய்து வருகிறது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை அடுத்த ஆவரங்காடு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு சென்ற போலீசார், மது விற்பனை செய்து கொண்டிருந்த அய்யனார் மற்றும் செல்வகுமார் ஆகிய இருவரையும் கைது செய்து, 50-க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து, காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அவர்களை போலீசார் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்ல முற்பட்டபோது, திமுக நகர செயலாளர் குமார் அங்கு வந்ததால், மது விற்பவர்களுக்கு ஆதரவாக வந்ததாக பேசப்படுகிறது. இதனால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், காவல் நிலையத்துக்கு தற்செயலாக சென்றதாக குமார் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்