பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை.. அலறிய பெண்..! கொடூரனை தட்டி தூக்கிய போலீஸ் | Kallakurichi
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் தெங்கியநத்தம் பகுதியை சேர்ந்த தம்பதி முனுசாமி-பிரியங்கா. முனுசாமி அருகில் உள்ள சர்க்கரை ஆலையில் வேலை பார்த்துவருகிறார். கடந்த 26ம் தேதி முனுசாமி இரவு பணிக்கு சென்ற நிலையில் , வீட்டில் தனியாக இருந்த பிரியங்கா கொடூரமாக தாக்கி அவர் அணிந்திருந்த 8 சவரன் நகையைக் கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக மாவட்ட எஸ் பி சம்பவ இடத்தை பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேலை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் தனியாக வீட்டில் இருந்த பிரியங்காவை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாகவும், அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை தாக்கியதாகவும் கூறி இருக்கிறார்.அதன் பின்னர் அவர் அணிந்திருந்த 8 சவரன் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றதாக வாக்குமூலம் அடித்து இருக்கிறார். மேலும் சக்திவேல் பல பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது...