phonepe-ல் இப்படியும் திருட்டு நடக்குதா?- அதிர்ந்து போன அதிகாரிகள்

x

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பெட்டிக் கடை மற்றும் மளிகைக் கடைகளில் ஃபோன்-பே செயலி மூலம் நூதன மோசடியில் ஈடுபட்ட மூன்று இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். அவசரமாக பணம் தேவைப்படுவதாகவும், ஃபோன்- பே மூலம் பணம் அனுப்புவதாகவும் கூறி, கடைக்காரர்களிடம் சுமார் 20 ஆயிரம் வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து விசாரித்துவந்த போலீசார் வெள்ளையூர் பகுதியை சேர்ந்த ஸ்ரீகாந்த், காத்தவராயன், அஜய் ஆகிய மூவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்