அதிக வட்டி ஆசை மூட்டிய நிறுவனம் - வீடியோவில் காட்டிய ரூ.150 கோடி-நம்பி ஏமாந்த மக்கள் போலீசில் தஞ்சம்

x

கள்ளக்குறிச்சி அருகே, அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி, மோசடியில் ஈடுபட்ட நபரை கைது செய்யக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தில், சமீர் என்பவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்று இயங்கி வந்ததாக கூறப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதந்தோறும் 15 ஆயிரம் ரூபாய் வட்டி தருவதாகவும், ஒரு வருடம் கழித்து முன் பணத்தையும் திருப்பி தருவதாகவும் கூறி, 500 க்கும் மேற்பட்டவரிடம் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பொதுமக்களை நம்ப வைக்க, கட்டு கட்டாக பணங்கள் இருப்பதாக, வீடியோ மூலம் காண்பிக்கப்பட்டு, 150 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நிதி நிறுவனத்தின் உரிமையாளர் சமீர் என்பவரிடமிருந்து பணத்தை மீட்டு தரக் கோரி, சங்கராபுரம் காவல் நிலையத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ‌குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது,


Next Story

மேலும் செய்திகள்