தமிழகத்தையே புரட்டி போட்ட வழக்கு.. 2 பேரை வீடியோவில் பார்த்ததும் நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

x

கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் 2 பேருக்கு தொடர்ந்து 4-வது முறையாக காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி விஷசாராய விவகாரத்தில் தொடர்புடைய 24 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர்களில் கருணாபுரத்தை சேர்ந்த பரமசிவம், முருகேசன் ஆகிய 2 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், அந்த இரண்டு பேரையும் கடலூர் மத்திய சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் ஆஜர்படுத்தினர். அதனையடுத்து பரமசிவம், முருகேசன் ஆகிய இருவருக்கும் ஆகஸ்ட் 22-ம் தேதி வரை தொடர்ந்து 4-வது முறையாக காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்...


Next Story

மேலும் செய்திகள்