திடீரென களத்தில் இறங்கிய மாவட்ட ஆட்சியர் - வியந்து போன மக்கள்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே நெல் நாற்று நடும் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் இயக்கிய நிகழ்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. வடசெட்டியேந்தல் கிராமத்தில் மானியம் மூலம் வழங்கப்பட்ட நெல் நாற்று நடவு செய்யும் இயந்திரம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. இந்நிகழ்வு தொடர்பாக நேரடியாக பார்வையிட சென்ற மாவட்ட ஆட்சியர், தானே அந்த இயந்திரத்தை இயக்கினார்.
Next Story