அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல்.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டம் வண்டிப்பாளையம் கிராமத்தில், பொதுப்பாதையை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து பாதை ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்ய கிராம நிர்வாக அலுவலர் பாக்கியராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சென்றனர். அப்போது சந்தோஷ் என்ற ஆக்கிரமிப்பாளர் விஏஓ மற்றும் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பி ஏற்பட்டது. இதுதொடர்பான புகாரில் சந்தோஷ் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story