கோர்ட்டில் கதறி அழுத ஸ்ரீமதி தாய்... பார்த்ததுமே நீதிபதி போட்ட உத்தரவு

x

இந்த வழக்கில் இருந்து பள்ளி ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து, ஸ்ரீமதியின் தாயார் கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். விசாரணையில், வழக்கு தொடர்பான ஆவணங்களை வழங்க கோரி ஸ்ரீமதியின் தாயார் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்க அரசு தரப்பு வழக்கறிஞர், கால அவகாசம் கேட்டதால் வழக்கை நீதிபதி ஒத்திவைத்திருந்தார். இந்நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்தது. ஸ்ரீமதி தாய் செல்வி, மற்றும் கனியாமூர் தனியார் பள்ளி முதல்வர் சிவசங்கரன், தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி ஆகியோர் ஆஜராகினர். விசாரணையில், மீண்டும் கூடுதல் அவகாசம் கேட்டு, அரசு தரப்பு கோரிக்கை வைத்த நிலையில், வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் எஃப்.ஆர்.ஐ. நகல் தருவதில் என்ன தயக்கம் என கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் ஸ்ரீமதியின் தாய் செல்வி, மகளின் மரணத்திற்கு நியாயம் கேட்டு கதறி அழுதார்.


Next Story

மேலும் செய்திகள்