திடீர் கவனம் பெற்ற மாணவி ஸ்ரீமதி வழக்கு - பள்ளி முதல்வர், தாளாளருக்கு பரபரப்பு உத்தரவு

x

மாணவி ஸ்ரீமதி மரண வழக்கு விசாரணை வரும் மே 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது...கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்டவர்களில் பள்ளி ஆசிரியைகள் கீர்த்திகா, ஹரிப்பிரியா ஆகியோரை வழக்கில் இருந்து நீக்கம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி மனு அளித்தார்... அதன் அடிப்படையில், கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் முதல் முறையாக கடந்த 16ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, செல்வி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாப்பாமோகன், வழக்கில் இருந்து நீக்கப்பட்ட இரு ஆசிரியைகளையும் மீண்டும் சேர்க்க வேண்டும் மற்றும் வழக்கிற்குத் தேவையான ஆவணங்களை வழங்க வேண்டும் என வாதிட்டார். அப்போது, ஆஜராகிய அரசு வழக்கறிஞர், மனுவிற்கு பதிலளிக்க கால அவகாசம் கோரியதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணை இன்றையத் தேதிக்கு ஒத்திவைத்து, நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, இந்த வழக்கு 2வது முறையாக கள்ளக்குறிச்சி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணையை வரும் மே 14ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து, நீதிபதி உத்தரவிட்டார். மேலும், அன்றைய தினம் சம்பந்தப்பட்ட கணியாமூர் பள்ளி தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, முதல்வர் சிவசங்கரன் ஆகிய மூவரும் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்