கள்ளக்குறிச்சி டூ ஆம்ஸ்ட்ராங் படுகொலை.. வெளியான அதிரடி அறிக்கை | Armstrong | Kallakurichi |Thanthitv

x

கடந்த அதிமுக ஆட்சியைப் போன்று போலீஸ் அதிகாரிகளை பாதுகாக்காமல், கடமை தவறிய போலீஸ் அதிகாரிகள் மீது உடனுக்குடன் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாக தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்படுட்டுள்ள அறிக்கையில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பிறகு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்றும், கள்ளக்குறிச்சி சாராய சம்பவத்தில், 9 பேர் பலியான தகவல் வந்தபோதே மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன் குமார் துரிதமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்சியர் மட்டுமன்றி, கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க தவறியதாக எஸ்.பி. சமய்சிங் மீனா உள்ளிட்ட போலீசார் கூண்டோடு மாற்றப்பட்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் துறையினரை இடமாற்றம், சஸ்பெண்ட் என முதல் கட்ட நடவடிக்கைகளை கூட அதிமுக அரசு எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

மேலும், குட்கா ஊழலில் தொடர்புடைய டிஜிபி ராஜேந்திரன், போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லைக் கொடுத்த புகாரில் ராஜேஷ் தாஸ், கலைஞர் கைது சம்பவத்தில் தொடர்புடைய போலீஸ் அதிகாரிகள் கிறிஸ்டோபர் நெல்சன், கே.முத்துக்கருப்பன் ஆகியோரை முந்தைய அதிமுக அரசு பாதுகாத்தது என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்