மனதை உலுக்கிய காளையார்கோவில் விவகாரம் போலீசை தாக்கி தப்பிய கொள்ளையன் தட்டி தூக்கிய காவல்துறை..நடுங்கும் சிவகங்கை
காளையார்கோவில் அருகே உள்ள கல்லுவழி கிராமத்தில், ஜனவரி 26-ஆம் தேதி, வீடு புகுந்து ஐந்து பேரை கொடூரமாக தாக்கிய கும்பல், 50 சவரன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது. இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் எட்டு தனி படைகள் அமைக்கப்பட்டு, விசாரணை நடத்தியதில், தென்னீர்வயலைச் சேர்ந்த தினேஷ் குமாரும், அவருடைய நண்பரான கல்லுவழியைச் சேர்ந்த கணபதியும் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீசார், தினேஷ் குமாரின் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்களை எடுப்பதற்கு அழைத்துச் சென்றனர். அப்போது, போலீசாரை தாக்கி விட்டு தப்ப முயன்ற தினேஷ் குமாரை, போலீசார் சுட்டுப் பிடித்தனர். இதில் காயமடைந்த தினேஷ் குமார், தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தினேஷ் குமார் தாக்கியதில், காயமடைந்த காவலர்கள் சித்திரவேல், ரவிச்சந்திரன், சரவணகுமார் ஆகிய 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.