காக்கா தோப்பு பாலாஜி உடலை அடக்கம் செய்யும் முன் சென்னை போலீசார் அதிரடி..

x

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி நேற்று என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில், காக்கா தோப்பு பாலாஜி உடன் இருந்த ஓட்டேரியை சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவரை கஞ்சா வைத்திருந்ததாக எம்கேபி நகர் போலீசார் கைது செய்தனர். அவரிடம் 10கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. காக்கா தோப்பு பாலாஜியின் உடல் ராயப்பேட்டை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆர்.டி.ஓ விசாரணை நடத்தி உடலை ஆய்வு செய்து கையெழுத்து பெற்றார்... இந்நிலையில், இன்று உடலானது அவரது தாயிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. கோயம்பேடு கோதாவரி நகரில் உள்ள அவரது தம்பியின் வீட்டிற்கு உடல் கொண்டு செல்லப்பட இருப்பதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்