கபாலீஸ்வரர் கோயில் வாசலில் பகீர் சம்பவம்.. யார் காரணம்? வெளியான தகவல்
சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் வாசலில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர், பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்த சம்பவத்தில் இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். இரு தினங்கள் முன்பு அரங்கேறிய இந்த சம்பவத்தில், கோயில் வாசலில் கிடந்த காலணிகள் மீது அந்நபர் மதுபோதையில் பெட்ரோல் ஊற்றி தீப்பற்ற வைத்தது தெரியவர, இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், வீடியோ காட்சி ஆதாரத்தின் அடிப்படையில் தீவிர விசாரணை நடத்தி வந்த போலீசார், அடையாளம் தெரியாத அந்த நபர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story