#JUSTIN || குடியரசு தலைவர் விருது - தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்கள் தேர்வு
தமிழகத்தை சேர்ந்த 21 காவலர்களுக்கு அறிவிப்பு.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காவல்துறைகள் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு குடியரசுத் தலைவரின் வீர வீர செயல்களுக்கான விருது சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கான விருது, குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான விருது ஆகவே வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு நாடு நாடும் முழுவதும் மொத்தம் 954 காவலர்களுக்கு குடியரசுத் தலைவரின் விருது அறிவிக்கப்பட்டுள்ளது
அந்த வகையில் காவல்துறையில் மிகச்சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான குடியரசுத் தலைவர் விருது தமிழகத்தை சேர்ந்த இரண்டு காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காவல் ஆணையர் அமல்ராஜ் மற்றும் ஐஜி பவனேஸ்வரி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது
அதேபோல குடியரசுத் தலைவரின் மெச்சத்தக்க சேவைக்கான விருது தமிழகத்தை சேர்ந்த 19 காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
சென்னை பெருநகர துணை ஆணையர் அரவிந்த், ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை, சென்னை துணை காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், பெரம்பலூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மதியழகன் தஞ்சாவூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு திருப்பூர் மாவட்ட காவல் ஆய்வாளர் முத்துமலை கோவை நகர காவல் கண்காணிப்பாளர் புகழ்மாறன் உள்ளிட்ட 19 காவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.