#JUSTIN | ஸ்தம்பிக்கும் நேஷனல் ரோடு... ஒரு இன்ச் கூட நகராத வாகனங்கள் - "2 மணி நேரம் ஒரே இடத்தில்..."
விழுப்புரம் நாகை தேசிய நெடுஞ்சாலை பணிகள் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வருகிறது, இந்நிலையில் பல்வேறு பகுதிகளில் அவ்வபோது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் சிதம்பரம் அருகே பெரியப்பட்டு முதல் மேட்டுப்பாளையம் வரை சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் அவல நிலை உள்ளது, காரணம் என்ன என்று பார்த்தால் பெரியப்பட்டு மேட்டுப்பாளையம் இடையில் ஐந்து கண் கம்மா பாலம் பணிகள் நடைபெற்று வருகிறது, இதனால் ஒரு வழி பாதையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் அந்த பகுதியை கடக்க இஞ்சி பை இஞ்சாக வாகனங்களை நகர்த்தி செல்லும் காட்சிகளை நாம் பார்த்து வருகிறோம், அந்தப் பகுதியில் மட்டும் ஒரு வாகனம் செல்வதற்கு சுமார் அரை மணி நேரம் ஆவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர், ஆகையால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நலன் கருதி அப்பகுதியில் நடைபெறும் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் காட்சிகள் கழுகு பார்வையில்.