#JUSTIN || ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீர் வரத்து, 8 ஆயிரத்து 500 கன அடியாக அதிகரித்துள்ளது...
கூடுதல் தகவல்களை எமது செய்தியாளர் நரசிம்ம குமாரிடம் கேட்கலாம்...
ஒகேனக்கல்லில் நீர்வரத்து அதிரடி உயர்வு
இரண்டு மடங்கான நீர்வரத்து
4000 கன அடியில் இருந்து 8500 கன அடியாக நீர்வரத்து அதிரடி உயர்வு
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள, தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டுலு பகுதிக்கு வருகின்ற நீரின் அளவு திடீரென உயர்ந்துள்ளது.
கடந்த ஒரு வாரமாக விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை திடீரென நீர்வரத்து உயர்ந்துள்ளது.
தமிழக காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை மற்றும் கர்நாடக அணைகளில் இருந்து நீர் திறப்பு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் நீர்வரத்து உயர்ந்துள்ளது,
தற்போதைய நிலவரப்படி காவிரியில் நீர்வரத்தின் அளவு 8500 கன அடியாக உள்ளது.
இந்நிலையில் நீர்வரத்து மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
10,000 கன அடி வரை, நீர் வர வாய்ப்பு உள்ளது. 8000 கன அடிக்கு மேல் காவிரியில் தண்ணீர் வரும் பொழுது, பரிசல் இயக்க தடை விதிக்கப்படும், தற்போது நீர்வரத்து உயர்ந்துள்ளதால் பரிசல் இயக்க தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது