மாணவர்களை வெளியேற்றி அரசு கள்ளர் மேல்நிலைபள்ளிக்கு பூட்டு..பார்வர்ட் பிளாக் கட்சியினரால் பரபரப்பு
தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில், அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் இருந்த மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு, பள்ளிக்கு பூட்டுபோட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசுப்பள்ளிகளில் உள்ள சாதிப்பெயர்களை நீக்க வேண்டும் என, முன்னாள் நீதிபதி சந்துருவின் தனிநபர் அறிக்கை, தமிழ்நாடு அரசுக்கு பரிந்துரைத்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அணைக்கரைப்பட்டி பகுதியில் உள்ள கள்ளர் மேல்நிலைப்பள்ளிக்கு, பார்வர்ட் பிளாக் கட்சி உள்ளிட்ட அமைப்புகள் பூட்டு போட்டனர். பள்ளிக்கு வந்த மாணவர்களை வெளியே அனுப்பிவிட்டு, பூட்டு போட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story