30 ஆண்டுகளுக்கு பிறகு கிடைத்த நீதி... மலைவாழ் கம்யூனிஸ்டுகளுக்கு மக்கள் உற்சாக வரவேற்பு | Dharmapuri
தர்மபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்திற்கு வருகை தந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் சண்முகத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த 1992-ஆம் ஆண்டு வாச்சாத்தி கிராமத்தில், 18 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில், குற்றஞ்சாட்டப்பட்ட வர்களுக்கு தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தீர்ப்பினை வரவேற்கும் விதமாக் கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர்கள், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாநில தலைவர் டில்லிபாபு உள்ளிட்டோர் வாச்சாத்தி கிராமத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்களை பொதுமக்கள் உற்சாகமாக வரவேற்றனர்
Next Story