"நைட்டு தான் போட்டாங்க.. கையில எடுத்தா ரொட்டி மாறி வருது.." - பகிரங்கமாக எச்சரித்த திருப்பூர் மக்கள்
திருப்பூர் மாவட்டம் அய்யம்பாளையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தார் சாலை தரமற்று இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அய்யம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகபாளையம் பிரிவிலிருந்து செட்டியாபாளையம் பிரிவு வரை, கடந்த 3 நாள்களுக்கு முன்பு புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. ஆனால், சாலை தரமற்று இருப்பதாக குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள், தானாக பெயர்ந்து வரவதால், புதிய சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இல்லை என்றால், போராட்டம் நடத்தப்படும் என்றும், மாவட்ட ஆட்சியரிடம் பெயர்ந்து வந்த சாலை வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
Next Story