#BREAKING || உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை

x

2024ம் ஆண்டுக்கான குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டத்துக்கான டெண்டரை இறுதி செய்ய உத்தரவிட கோரி வழக்கு.

தமிழகத்தில் முப்போகம் விளைந்தது. ஆனால் தற்போது ஒருபோகம் விளைவிப்பதே கேள்விக்குறியாகி உள்ளது.- நீதிபதிகள் வேதனை

விவசாயிகள் விஷயத்தில் மிகவும் கடுமை காட்ட வேண்டாம் அரசின் திட்டங்கள் அவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யுங்கள்- நீதிபதிகள்

தமிழகத்தில் ராபி பருவம் மற்றும் காரிப் பருவம் எந்த மாதம் தொடங்குகிறது, எந்த மாதம் முடிவடைகிறது . என்பது குறித்து தற்போதைய கால அட்டவணையை தாக்கல் செய்யுங்கள்

மத்திய வேளாண் துறை செயலருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.

தஞ்சாவூர் மாவட்டம் நாஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த ஜீவகுமார், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

நாடு முழுவதும் பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் 1.5 முதல் 5 சதவீத பணம் செலுத்தினால் போதும். எஞ்சிய தொகையை மத்திய, மாநில அரசுகள் செலுத்துகின்றன.

டெல்டா பகுதியில் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடியும், 13 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடியும் நடைபெறும். தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.32 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெறுகிறது.

தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படவில்லை. பல்வேறு மாநிலங்களில் அந்தந்த மாநில அரசுகள் குறுவை சாகு படி பயிர் காப்பீடு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படாததால் மத்திய அரசின் பங்களிப்பு தொகையை இழந்துள்ளோம்.பேரிடர் மேலாண்மை திட்டத்தில் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே கிடைக்கும். குறுவை பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தினால் ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை இழப்பீடு கிடைக்கும்.

தற்போது ஒரு லட்சம் விவசாயிகள் 3.50 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்துள்ளனர். போதுமான வருமானம் கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.13,500 போதுமானது அல்ல.தமிழகத்தில் நவ. 15-க்கு முன்பு பயிர் காப்பீடு திட்டம் தொடர்பான மாநில அளவிலான குழுக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

இந்தக் கூட்டத்தில் 2024ம் ஆண்டுக்கான குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடு திட்டத்துக்கான டெண்டரை இறுதி செய்ய உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் சுந்தர் , சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், விவசாயிகளுக்கு பயிர் காப்பீடை உறுதி செய்ய வேண்டும். என கூறிய நீதிபதிகள்,

தமிழகத்தில் முப்போகம் விளைந்தது. ஆனால் தற்போது ஒருபோகம் விளைவிப்பதே கேள்விக்குறியாகி உள்ளது.

விவசாயிகள் விஷயத்தில் மிகவும் கடுமை காட்ட வேண்டாம் அரசின் திட்டங்கள் அவர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யுங்கள் என கூறிய நீதிபதிகள்

தமிழகத்தில் ராபி பருவம் , காரிப் பருவம் எந்த மாதம் தொடங்குகிறது, எந்த மாதம் முடிவடைகிறது . என்பது குறித்து தற்போதைய கால அட்டவணையை தாக்கல் செய்ய மத்திய வேளாண் துறை செயலருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நவம்பர் 24. ம் தேதி ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்