நியோமேக்ஸ் நிதி மோசடி விவகாரம் - ட்விஸ்ட் கொடுத்த நீதிபதி

x

இந்த விவகாரம் குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி நாகார்ஜுன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், நியோமேக்ஸ் மூலம் பெறப்பட்ட பணம் பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றும், எனவே கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என வாதிட்டார். இதனை தொடர்ந்து நீதிபதி, பிரச்சனைகளை தீர்க்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க மனு தாக்கல் செய்த நிலையில், விசாரணை போலீசாரிடம் ஏன் சரணடையவில்லை என கேள்வி எழுப்பினார். மேலும் மனு குறித்து மாவட்ட குற்றவியல் போலீசார் விரிவான பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை இம்மாதம் 24 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்