கோவையை உலுக்கிய ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை சம்பவம் - பாயிண்டை பிடித்த போலீஸ்.. புதிய திருப்பம்
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில், 200 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2வது நாளாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை காந்திபுரம் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் 200 சவரன் தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இந்த சம்பவம் தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளை சம்பவத்தின் போது பதிவான கைரேகைளின் அடிப்படையில், பழைய குற்றவாளிகள் குற்றச் சம்பவத்தில் ஈடுபடவில்லை என போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இதனிடையே, நகைக் கடையில் வேலை பார்த்த முன்னாள் மற்றும் தற்போது பணிபுரியும் ஊழியர்களின் செல்போன் உரையாடல் மற்றும் ஆவணங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மிக துல்லியமாக கடையினுள் புகுந்து நகைகளை தேர்ந்தெடுத்து கொள்ளை அடித்த சம்பவம், போலீசாருக்கு ஊழியர்கள் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளதை அடுத்து, தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.