ஜோலார்பேட்டையில் சிக்கிய `உப்மா' டாக்டர் | Jolarpet | doctor

x

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மருத்துவ படிப்பு படிக்காமல் பல வருடங்களாக மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் ராஜேந்திரன் என்பவர் கைது செய்யப்பட்டார். திருப்பத்தூர் அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலருக்கு வந்த ரகசிய தகவலின் பேரில் தந்திரமாக செயல்பட்டு ராஜேந்திரனைப் பிடித்தனர். இதுகுறித்து முதன்மை மருத்துவ அலுவலர் செல்வநாதன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் ராஜேந்திரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்