சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் வேலை!
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில், ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களை தேர்வு செய்ய, டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம், 117 ஓட்டுநர்கள் மற்றும் 117 நடத்துனர்கள் என 234 பேரை, ஒப்பந்த அடிப்படையில் தேர்வு செய்வது தொடர்பாக டெண்டர் வெளியிட்டுள்ளது. அக்டோபர் 31 ஆம் தேதி மதியம் 2.30 மணிவரை, தனியார் மேன்பவர் ஏஜென்சிகள் இந்த டெண்டருக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் ஊழியர்களுக்கு இ.எஸ்.ஐ மற்றும் பி.எப்.போன்ற சலுகைகள் உட்பட, மாதம் 22 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story