அடி வயிற்றை பிடித்து துடித்து மூன்றரை வயது மகள் சொன்ன வார்த்தை எந்தத் தாயும் கேட்கக்கூடாத கொடுமை

x

அடி வயிற்றை பிடித்து கதறி துடிதுடித்து

மூன்றரை வயது மகள் சொன்ன வார்த்தை

எந்தத் தாயும் கேட்கக்கூடாத கொடுமை

ஜார்கண்ட் மாநிலம் ஜம்ஷெத்பூரில் மூன்றரை வயது குழந்தையை பள்ளி வேன் டிரைவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது... பின்னணி என்ன?...பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

பள்ளி வேனில் வைத்தே...பிஞ்சுக் குழந்தை என்றுகூட பாராமல்...துடிக்கத் துடிக்க பாலியல் பலாத்காரம் செய்த மனித மிருகம் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளது...

நடந்தது என்ன?...

ஜார்கண்ட் மாநிலம்... ஜம்ஷெத்பூர்...

எப்போதும் பள்ளிக்கு சென்று விட்டு துறுதுறுவென வீட்டுக்குள் நுழையும் அந்த மூன்றரை வயது சிறுமி...அன்று வழக்கத்திற்கு மாறாக மிரட்சியோடு வந்திருக்கிறார்...

என்ன ஆனது என்று அம்மா கேட்க...அடிவயிறு வலிப்பதாக கதறித் துடித்திருக்கிறாள் குழந்தை...

அந்தப் பச்சை மண்ணின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் எந்தத் தாயும் கேட்கக்கூடாதவை...

பள்ளி வேனில் வைத்து வேன் ஓட்டுநர் மிருகம் செய்த கொடூரங்களைக் குழந்தை ஒவ்வொன்றாகக் கூற...பதறிப்போனார் சிறுமியின் தாய்...

உடனடியாக குழந்தையின் தாய் போலீசில் புகார் தரவே...காவல்துறையினர் வேன் ஓட்டுநரான ஜெய்ஸ்ரீ திவாரியைக் கைது செய்துள்ளனர்...

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் ஜூன் மாதம் மற்றொரு மைனர் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்...

கடந்த ஏழே மாதங்களில் அம்மாநிலத்தில் சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பான 6 வழக்குகள் பதியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

குழந்தைகளைக் கூட விட்டு வைக்காத இவர்கள் மிருகங்களை விட கொடூரமானவர்கள்...தினம் தினம் சீரழிக்கப்படும் தன் மகள்களுக்காக நீதித்தாய் கடும்போக்கு காட்ட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது...


Next Story

மேலும் செய்திகள்