ஜே.இ.இ. முதன்மைத் தேர்வு.. இந்த மதிப்பெண் பதிவேடு முக்கியம் | JEE Main
ஜனவரியில் தொடங்கும் ஜே.இ.இ முதன்மை தேர்வுக்கு நவம்பர் 30 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு மதிப்பெண் பதிவிட வேண்டும் என தேசிய தேர்வு முகமை கட்டாயமாக்கியிருந்தது. இந்த நிலையில், கொரோனா காரணமாக தமிழகத்தில், 2021ம் ஆண்டு 10ம் மற்றும் 12ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்காமல் ஆல் பாஸ் வழங்கப்பட்டது. இதனால் அவர்கள் விண்ணப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டது. இதில் இருந்து தமிழக மாணவர்களுக்கு, தேசிய தேர்வு முகமை விலக்கு அளித்துள்ளது.
அவர்கள், விண்ணப்பிக்கும் போது தேர்ச்சி பெற்ற ஆண்டு மற்றும் தமிழ்நாடு என்ற விவரத்தை பதிவு செய்தால், மதிப்பெண் பதிவு செய்ய வேண்டிய கட்டம் மறைந்து, எளிதில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story