பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்கள் யாருக்கு?
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்து வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஏலம் விட வேண்டும் என சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு அளித்தார். இதனை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், சொத்துக்களை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் அண்ணன் மகள் தீபா, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்நிலையில், தீபக் மற்றும் தீபாவின் மேல்முறையீட்டு வழக்கை, விரைந்து முடிக்குமாறு, கர்நாடக சட்டத்துறை செயலருக்கு, சமூக ஆர்வலர் நரசிம்ம மூர்த்தி, கடிதம் எழுதியுள்ளார்.
Next Story