ஜெயலலிதா கார் ஓட்டுநரின் சகோதரருக்கு திடீர் நெஞ்சுவலி.. வலியில் துடித்த படியே CM-க்கு கோரிக்கை
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரின் சகோதரர் தனபால், மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
சேலம் மாவட்டம் எருமைப்பட்டி பகுதியைச் சேர்ந்த வாசுதேவன் என்பவரிடம் நிலத்தை கிரயம் செய்து பணம் தராமல் ஏமாற்றிய புகாரில், ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து கடந்த வாரம் நெஞ்சுவலி ஏற்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அவர் போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து செல்லப்பட்டார். இதனிடையே காவல்துறையினர் அழைத்துச் செல்லும்போது, தனது இரண்டு மகள்களையும் முதல்வர் காப்பாற்ற வேண்டுமென, கண்ணீர்மல்க கோரிக்கை விடுத்தார்.