"ஜெயலலிதாவின் பட்டுப்புடவைகள், காலணிகளை ஏலம்..." - பரபரப்பு கடிதம்

"ஜெயலலிதாவின் பட்டுப்புடவைகள், காலணிகளை ஏலம்...“ - பரபரப்பு கடிதம்
x

கர்நாடகா கருவூலத்தில் தேங்கியுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடைமைகளை ஏலம் விட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, பெங்களூரை சேர்ந்த சமூக ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், சொத்து வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்தபோது, ஆயிரக்கணக்கான புடவைகள், நூற்றுக்கணக்கான செருப்புகள், கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் அசையும் அசையா சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த உடைமைகள், கர்நாடக அரசின் கருவூலத்தில் தேங்கியுள்ளன. ஜெயலலிதாவின் புடவை, செருப்பு, கைக்கடிகாரம் உள்ளிட்ட பொருட்கள் சேதமடைய வாய்ப்புள்ளதால், அதனை ஏலம் விட்டால், அவர் மீது பற்றுள்ள தொண்டர்கள் பொக்கிஷமாக நினைத்து வாங்கி பாதுகாக்க கூடும் என்றும் அதன் மூலம் கிடைக்கும் பணத்தை பொதுமக்களின் நிதியாக கொண்டு வர வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் கோரியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்