"ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்" - தலைமை தேர்தல் ஆணையர் தகவல்
ஜம்மு காஷ்மீரில் விரைவாக தேர்தல் நடத்த உறுதி பூண்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக, தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையிலான குழு, 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டது. பலதரப்பட்ட ஆலோசனைகளுக்குப் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ் குமார், மக்களவைத் தேர்தலில் காஷ்மீர் வாக்காளர்களின் பங்களிப்பு பாராட்டுக்குரியது என்றார். இத்தனை ஆண்டுகளாக நடைபெறாத தேர்தலை, நடத்த முடியும் என்று மக்கள் நிரூபித்து காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டார். காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதற்கு பொருத்தமான தருணம் என குறிப்பிட்ட அவர், விரைவில் தேர்தலை நடத்த உறுதி பூண்டுள்ளதாக தெரிவித்தார். டெல்லிக்கு சென்றபின், உச்சநீதிமன்ற வழங்கிய காலக்கெடு மற்றும் பாதுகாப்பு சூழல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் ராஜீவ் குமார் கூறினார்.