மொஹரம் பண்டிகை.. கருப்பு உடை அணிந்து காஷ்மீரில் இஸ்லாமியர்கள் மௌன ஊர்வலம் | Jammu Kashmir

x

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், மொஹரம் பண்டிகையையொட்டி, முஸ்லிம்கள் கருப்பு உடை அணிந்து படகு ஊர்வலம் நடத்தினர். முஸ்லிம்களின் புனித மாதங்களில் ஒன்றான மொஹரம் துக்க நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் இஸ்லாமியர்கள் மெளன ஊர்வலம் சென்று தங்களின் துக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள். இறை தூதர் முகம்மது நபியின் பேரனான இமாம் ஹூசைன் இபின் அலியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இது அவருக்குரிய நாளாக குறிப்பிடப்படுகிறது. இதையொட்டி, ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகரில், முஸ்லிம்கள் கருப்பு உடை அணிந்து, தால் ஏரியில் படகு ஊர்வலம் நடத்தினர்.


Next Story

மேலும் செய்திகள்