"ஜாபர் சாதிக்கின் முதலாளியா..?" - ஷாக்கான மலேசியாவின் டத்தோ மாலிக்
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஜாபர் சாதிக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று மலேசியாவைச் சேர்ந்த டத்தோ மாலிக் விளக்கம் அளித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அப்துல் மாலிக், மலேசியாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் தொடர்புடைய கடத்தல் கும்பலின் தலைவர் மலேசியாவைச் சேர்ந்தவர் என்று டத்தோ மாலிக் பெயரைக் குறிப்பிட்டு தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள டத்தோ மாலிக், ஜாபர் சாதிக்கிற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், ஜாபர் சாதிக்கை தாம் நேரில் பார்த்தது கூட இல்லை என்றும் கூறினார்.
Next Story