12 மணி நேரம் கிடுக்கி பிடி விசாரணை - ஜாபர் சாதிக் அளித்த வாக்குமூலம்

x

சென்னை அழைத்து வரப்பட்ட ஜாபர் சாதிக்கிடம்,12 மணி நேர விசாரணைக்கு பிறகு விமானம் மூலமாக டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ரூபாய் 2000 கோடி போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கை, நேற்று காலை டெல்லியில் இருந்து விமானம் மூலமாக அதிகாரிகள் சென்னை அழைத்து வந்தனர். சென்னையை அடுத்த அயப்பாக்கம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் வைத்து அவரிடம் சுமார் 12 மணி நேரத்திற்கு தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அவர் அளித்த தகவலின் பேரில் ஜாபர் சாதிக்கின் மேலாளர் இம்ரான் மற்றும் கணக்காளர் ஷெரிப் ஆகியோரையும் அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். குறிப்பாக இவர் போதை பொருள் கடத்தல் மூலமாக சம்பாதித்த சொத்துக்கள் குறித்தும், அவரிடம் தொடர்புடையவர்கள் குறித்தும் வாக்கு மூலமாக பெற்றனர். நாளையுடன் ஜாஃபர் சாதிக்கின் கஸ்டடி முடிவடைவதால் அவரை விமானம் மூலமாக டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். அவர் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட நடவடிக்கையில் மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஈடுபட உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்