அரசு வேலை தேடும் ஓட்டுனர்களுக்கு அடித்த ஜாக்பாட்
கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளை மீண்டும் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என எம்.எல்.ஏ காந்தி ராஜன் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், கொரோனா காலத்தில் பேருந்துகள் நிறுத்தப்பட்டது போதுமான ஓட்டுநர் நடத்துநர் இல்லாத காரணத்தால் தான் என்றும், விரைவு போக்குவரத்துக் கழகத்தில் தற்போது 600 ஓட்டுநர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், மற்ற போக்குவரத்து கழகத்திலும் புதிய ஓட்டுநர் நடத்துநர்களை நியமிக்க பணிகள் நடைபெறுவதாகத் தெரிவித்த அவர், பணி நியமனத்திற்குப் பிறகு நிறுத்தப்பட்ட வழிதடங்களில் மீண்டும் பேருந்துகள் இயக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.
Next Story