அதிர்ச்சி செய்தியை 45 நாளாகியும் வெளியிடாத இத்தாலி நாட்டு அரசு.. தமிழகத்தில் கதறும் பெற்றோர்

x

இத்தாலியில், மர்மமான முறையில் உயிரிழந்த நீலகிரியைச் சேர்ந்த இளைஞரின் உடலை சொந்த ஊருக்குக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதிக்குட்பட்ட ஆனைகட்டி பகுதியைச் சேர்ந்த வில்சன் - தங்கம்மா தம்பதியின் 2-வது மகனான சஜீஷ், 2018-ம் ஆண்டு முதல் இத்தாலியில் பணியாற்றிவந்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டிற்கு வந்து இத்தாலி திரும்பிச்சென்றவர், ரோம் நகரில் தங்கி வேலை செய்துவந்துள்ளார். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 12ம் தேதி வீட்டிற்கு தொடர்பு கொண்ட நிலையில் அதற்கு பிறகு எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன் இத்தாலியில் உள்ள மலையாளிகள் அசோசியேசன் மூலம் குடும்பத்தினருக்கு சஜீஷ் உயிரிழந்துவிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதனால் பதறிய சதீஷ் குடும்பத்தினர் இத்தாலி தூதரகம் மூலம் உண்மைத் தகவலை கேட்டு தெரிவிக்க வேண்டுமென நீலகிரி ஆட்சியர் அருணாவிடம் மனு கொடுத்தனர்.

இத்தாலியில் உள்ள அரசுமருத்துவமனையில் சதீஷ் உடல் வைக்கப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டது. அவரது உடலை இந்தியா கொண்டுவருவதற்காக நீலகிரி எம்.பி. ராசா வெளியுறவுத்துறை அமைச்சிருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்