"ரூ.30 லட்சம் கோடியாக உயரும்" - மத்திய ஜவுளித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சொன்ன தகவல்
கோவையில் நடைபெற்ற ஆசிய ஜவுளித்துறை மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய அவர், ஜவுளித் துறையில் இந்தியாவின் பங்களிப்பு 30 சதவீதமாத உள்ளது என்று கூறினார். அடுத்த 30 ஆண்டுகளில், இந்தியாவின் ஜவுளி பொருளாதாரம் 30 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என்றும் அவர் கூறினார். நிகழ்ச்சியில் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, இந்தியாவின் ஜவுளி வர்த்தகம் வரும் ஆண்டுகளில் 350 பில்லியன் டாலராக உயரும் என்றும், ஏற்றுமதி மட்டும் 100 பில்லியன் டாலராக அதிகரிக்கும் என்றும் கூறினார். தமிழ்நாடு கைத்தறித் துறை அமைச்சர் காந்தி பேசும்போது, தமிழ்நாட்டுக்கு தேவையான அனைத்து கோரிக்கைகளையும் அமைச்சர் பியூஷ் கோயல் நிறைவேற்றி தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். விழாவில் அமைச்சர் சக்கரபாணி, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story