விடிய விடிய கொட்டிய மழை.. குளுகுளுவென மாறிய தமிழகம்.. குஷியான மக்கள்

x

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.

கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மழையானது சுமார் 4 மணி நேரம் வெளுத்து வாங்கியது. மாயனூர், மணவாசி, லாலாபேட்டை, மகாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

ஒட்டன்சத்திரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. கொசவபட்டி, அம்பிளிகை, களிமந்தயம் , மூலச்சத்திரம், செம்மடைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு மணி நேரம் பெய்த கனமழையால், குளிர்ச்சியான சூழல் நிலவியது.

ரிஷிவந்தியம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், நள்ளிரவு நேரத்தில் கனமழை பெய்தது. பகல் வேளைகளில் வெயில் வாட்டி வந்த நிலையில், இரவில் பெய்த மழையானது கோடை வெப்பத்தை தணித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், இடி மின்னலுடன் கனமழை பெய்தது. தொடர்ந்து இரவு நேரங்களில் கன மழை பெய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சம்பா நெல் நடவு பணியை துவக்க தயாராகி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்