இஸ்ரேலுக்கு எதிராக எழுந்த குரல்கள்.. கவலைக்கிடமான 89 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் | Thanthitv
காசாவின் கான் யூனிஸ் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 90 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து இஸ்ரேலுக்கு எதிராக துனிசியாவில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது...துனிசிய தலைநகரில் உள்ள பிரான்ஸ் தூதரகத்திற்கு வெளியே திரண்ட போராட்டக்காரர்கள் பாலஸ்தீன கொடிகளை அசைத்து இஸ்ரேலுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்... காசாவில் இதுவரை இஸ்ரேல் தாக்குதலால் கிட்டத்தட்ட 39 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில், 89 ஆயிரத்திற்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story