ஒரே நேரத்தில் சிதறிய 3000 ஸ்லீப்பர் செல்ஸ்... எப்படி சாத்தியம்? உலகமே கேட்ட கேள்விக்கு விடை இதோ!

x

ஒரே நேரத்தில் சிதறிய 3000 ஸ்லீப்பர் செல்ஸ்

இந்த தாக்குதல் எப்படி சாத்தியம்?

உலகமே கேட்ட கேள்விக்கு விடை இதோ!

அமெரிக்க உளவு அமைப்பையே

மிரள விட்ட இஸ்ரேலின் மொசாத்

லெபனானில் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் வெடித்து மிகப்பெரிய தாக்குதல் நடத்தப்பட்டதற்கு மூளையாக செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள மொசாத் உளவு அமைப்பு, இவ்வளவு பெரிய தாக்குதலை சாத்தியமாக்கியது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம்...

ஸ்மார்ட் போன் புயலில் பேஜர்கள், வாக்கி டாக்கிகள் எல்லாம் அடித்துச் செல்லப்பட்டு விட்டன...

ஆனால், Out datedஆகக் கருதப்படும் பேஜர்களையும், வாக்கி டாக்கிகளையும் வைத்து லெபனானில் இஸ்ரேலின் பரம எதிரியான ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினரைக் குறிவைத்து மிகப்பெரிய தாக்குதலை அரங்கேற்றியுள்ளது இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத்...

ஆம்...தலைநகர் பெய்ரூட்டில் உள்ள மருத்துவமனை...சந்தை...உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெடித்துச் சிதறிய ஆயிரக்கணக்கான பேஜர்கள், வாக்கி டாக்கிகளால் 32 பேர் கொல்லப்பட்டதுடன், 3000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்...

ஆனால் இஸ்ரேல் இதுவரை இதுபற்றி வாய் திறக்கவே இல்லை...

எப்படி இது சாத்தியமானது?...

3 இஸ்ரேலிய உளவுத்துறை அதிகாரிகளிடம் "நியூயார்க் டைம்ஸ்" நடத்திய நேர்காணலில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன...

ஆம்...அந்தக் குறிப்பிட்ட பேஜர்களைத் தயாரித்தது இஸ்ரேலின் ஷெல் கம்பெனியாம்...உருவாக்கியது மொசாத் என தெரிவிக்கப்பட்டுள்ளது...

ஹங்கேரியைத் தலைமையகமாக கொண்டு இயங்கி வரும் பிஏசி கன்சல்டிங் நிறுவனம் மற்ற வாடிக்கையாளர்களுக்காக வழக்கமான பேஜர்களைத் தயாரித்த போதிலும்...

ஹிஸ்புல்லாவுக்காகத் தனியாக தயாரித்தவற்றில் வெடிக்கும் தன்மை கொண்ட பேட்டரிகளைப் பொருத்தி இருந்தனவாம்...

பேட்டரிகளில் Pentaerythritol Tetranitrate என்ற 3 கிராம் எடையுள்ள சக்தி வாய்ந்த வெடிபொருள் மறைத்து வைக்கப்பட்ட நிலையில்...பல மாதங்களாக ஹிஸ்புல்லா அதைக் கண்டுபிடிக்காதது ஆச்சரியமாக உள்ளது...

இந்த பேஜர்கள் முதன்முதலில் லெபனானுக்கு 2022இல் அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

ஹிஸ்புல்லாவைப் பொருத்தவரை செல்போன்கள் இஸ்ரேலின் ஏஜெண்ட்டுகள்...எப்படியும் ரகசியத்தைக் கறந்து விடுவார்கள்...

அதனால் அவற்றிற்குத் தடை விதித்து... பேஜர் பயன்பாட்டுக்குத்தான் அனுமதி வழங்கப்பட்டிருந்தது...

இந்த BAC Consulting நிறுவனத்திற்கு தைவானின் Gold Apollo நிறுவனத்துடன் தொடர்புண்டு...

இந்த Gold Apollo தயாரித்த பேஜர்கள் வெடித்தும் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர்...

வாக்கி டாக்கிகள் வெடித்துச் சிதறியவை தொடர்பான தகவல்கள் இனி ஒவ்வொன்றாக வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது...

ஆயுத தாக்குதல் ஒருபுறமென்றாலும்... ஹிஸ்புல்லாவினரை இஸ்ரேல் சைபர் தாக்குதல்கள் மூலம் குறிவைத்து வருகிறது...

இந்த ஆபரேஷனுக்கு "யூனிட் 8200" முக்கிய பங்காற்றியுள்ளது...

'சைபர் உளவாளிகள்' தான் இந்த யூனிட் 8200...

இது அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சியுடன் ஒப்பிடுமளவு...மிகத் திறமை வாய்ந்த இராணுவக் குழு...

இஸ்ரேல் அல்லாத அரபு பிராந்தியத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது ஹிஸ்புல்லா...

இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலுடன் ஹிஸ்புல்லா மல்லுக்கட்டி வரும் நிலையில்...பேஜர்-வாக்கி டாக்கி வெடிப்பு என இரட்டை தாக்குதல் நடத்தி தாங்கள் தான் சர்வ வல்லமை பொருந்தியவர்கள் என்பதை ஹிஸ்புல்லாவுக்கு உணர்த்தக்கூட மொசாத் இந்தத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கலாம்...

அல்லது... நாங்கள் எந்த நேரத்திலும்...எந்த ரூபத்திலும் தாக்குவோம் என்று...இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுடன் போருக்குத் தயாராக இருப்பதை அனுப்பும் தூதாகக் கூட இந்த இரட்டைத் தாக்குதல் இருக்கலாம்...

இனி லெபனானில் போன் ஒலித்தால் கூட குலை நடுங்கும் மரண பயத்தைக் காட்டியுள்ளது மொசாத்...


Next Story

மேலும் செய்திகள்