அமெரிக்காவே எச்சரிக்கிறது... அபாயத்தை தொட்டு நடுங்கும் இஸ்ரேல்.. வெடிக்க போகும் பெரும் போர்

x

உஷார்.. என அமெரிக்காவே எச்சரிக்கிறது

அபாயத்தை தொட்டு நடுங்கும் இஸ்ரேல்

வெடிக்க போகும் 21ம் நூற்றாண்டின் பெரும் போர்

இஸ்ரேல் - ஹமாசுக்கு இடையேயான ஓயாத போர் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வர, இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது இஸ்ரேலில் ? என்பதை பார்க்கலாம் விரிவாக...

கடந்த 10 மாதங்களாக போர் சத்தத்தால் நிறைந்த காசாவில்,

40 ஆயிரத்தை கடந்து பாலஸ்தீனர்களின் உயிர் பலியாகிக் கொண்டே வருகிறது..

தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்தாலும், பசி, பட்டினி, சுகாதார சீர்கேட்டால் வரும் தொற்று நோய்களிடம் இருந்து தப்பிக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர் காசா வாழ் பாலஸ்தீனர்கள்...

மற்றொரு புறம், இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் ராணுவம் என இரு தரப்பும் சளைக்காமல் தாக்குதல்களை அரங்கேற்றி வர, ஹமாஸ்-ஐ சேர்ந்த முக்கிய தலைவர்களை குறிவைத்து அதிரடி காட்டியது இஸ்ரேல்..

ஹமாசுக்கு ஆதரவாக பல குழுக்கள் உதவி வர, அதில் பெரும் பங்காற்றி வருவது ஈரான் ஆதரவை கொண்ட ஹிஸ்புல்லா குழு...

இஸ்ரேலை எதிரியாக கருதும் ஷியா இஸ்லாமியர்களின் ஆதரவையும் கொண்டது ஹிஸ்புல்லா...

இதனால் ஹிஸ்புல்லா மீதும் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், லெபனான் தலைநகர் பெய்ரூட் மீது நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் கமாண்டர் பலியானார்.

இதைத் தொடர்ந்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவும் இஸ்ரேலால் கொல்லப்பட்டதால், பதிலடி கொடுக்க காத்திருந்தது ஹிஸ்புல்லா அமைப்பு..

இதுகுறித்து இஸ்ரேலுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருந்த சூழலில், திடீர் தாக்குதலை அரங்கேற்றியது ஹிஸ்புல்லா..

குறிப்பாக வடக்கு இஸ்ரேலில், அதிக எண்ணிக்கையிலான குண்டுகளையும், ட்ரோன்களையும் வீசி அதிரடி தாக்குதல் நடத்தியது ஹிஸ்புல்லா..

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேலும் கடும் தாக்குதலை முடுக்கிவிட்டுள்ளது.

எப்போது வேண்டுமானாலும், ஹிஸ்புல்லா தரப்பில் பதில் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், 48 மணி நேரத்திற்கு அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளது இஸ்ரேல் அரசு...

அதே நேரம், தெற்கு லெபனானில் வசிப்பவர்கள், வீடுகளுக்கு அருகில் பெரிய அளவிலான ஹிஸ்புல்லாவின் தயாரிப்புகளை கண்காணித்து வருவதாக கூறியுள்ள இஸ்ரேல், ஹிஸ்புல்லா செயல்படும் பகுதிகளுக்கு அருகில் இருக்கும் எவரும் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்க உடனடியாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேற வேண்டும்" என எச்சரித்துள்ளது.

இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளதால், உலக அரங்கில் பரபரப்பு நிலவி வருகிறது..


Next Story

மேலும் செய்திகள்