ஈஷா அறக்கட்டளை அமைக்கும் சுடுகாடு.. தாக்குதல் நடத்தினரா நிர்வாகிகள்?

x

கோவை முட்டத்துவயல் பகுதியில் பழங்குடியின மக்களுக்கு சொந்தமான நிலத்தில், ஈஷா அறக்கட்டளை சார்பில் மின் தகன மேடை அமைக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பான விதிமீறல் வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், முற்போக்கு அமைப்பினரின் உண்மை கண்டறியும் குழு மின் தகன மேடையை ஆய்வு செய்ய சென்றுள்ளது. அப்போது முற்போக்கு அமைப்பினர் மீது ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஈஷா மைய நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முற்போக்கு அமைப்பினர் புகார் மனு அளித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்