ஆதியோகியால் ஈஷாவுக்கு சிக்கல்..! "எங்கேயும், எப்போதும் நாங்கள் தயார்" - ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

x

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை மற்றும் கட்டிடங்களுக்கு அனுமதி பெறவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில், ஈஷா மையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள ஆதியோகி சிலையையும், அருகில் கட்டப்பட்ட கட்டிடங்களையும் அகற்றக் கோரி பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை தரப்பில், சம்மந்தப்பட்ட இடத்தில் கட்டிடம் கட்ட முன் அனுமதி பெற்றதற்கான எந்த ஆவணங்களும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

கட்டிடம் கட்ட அனுமதியோ, தடையில்லா சான்றோ ஈஷா பவுண்டேஷன் நிர்வாகி பெறவில்லை என்றும் அரசுத்தரப்பில் கூறப்பட்டது.

இதையடுத்து, மனுதாரரும், ஈஷா பவுண்டேஷன் தரப்பும் தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்ய, கோவை நகர திட்ட இணை இயக்குனருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சம்பந்தப்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி பெறப்படவில்லை என்பது தெரியவந்தால், உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்