"ஈஷா மையம் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க தடையில்லை"

x


கோவை ஈஷா மையம் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க எந்தவொரு தடையும் இல்லையென உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஈஷா மையம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் இந்த தீர்ப்பு குறித்து பார்க்கலாம் விரிவாக...

கோவையை சேர்ந்த பேராசிரியர் ஒருவர், யோகா பயிற்சிக்காக ஈஷா மையம் சென்ற தன் இரு மகள்களையும் காணவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது..

தன் மகள்கள் இருவரையும் ஆசிரமத்தினர் மூளைச்சலவை செய்து துறவறம் ஏற்க செய்திருப்பதாக கூறிய அவர், மகள்களை மீட்டுத் தரும்படி கோரியிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது...

வழக்கை விசாரித்த நீதிபதி, ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக பதிவான அனைத்து வழக்குகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யும் படி தமிழக காவல்துறை மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்...

இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஈஷா அறக்கட்டளை மேல்முறையீடு செய்தது ..

அப்போது, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிட்டனர்..

கூடவே, உயர்நீதிமன்ற உத்தரவு பேரில் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்க கூடாது என தமிழக காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உயர்நீதிமன்றம் தாக்கல் செய்ய சொன்ன அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்படியும் உத்தரவு பிறப்பித்தனர்...

இந்நிலையில், சமூக நலத்துறை அதிகாரிகளும் காவல்துறை அதிகாரிகளும் சேர்ந்து சுமார் 100க்கும் மேற்பட்டோர், கோவை ஈஷா மையத்தில் இரண்டு நாள்களாக தங்கி ஆய்வு செய்தனர்..

இதில், தமிழக அரசு தாக்கல் செய்த 23 பக்க அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தது...

ஈஷா மைய அறக்கட்டளையில்... கடந்த 15 வருடங்களில் அங்கிருந்தவர்கள் காணாமல் போனது தொடர்பாக 6 வழக்குகள் இருப்பதாகவும், இதில் காணாமல் போனவர்களை கண்டுபிடிக்க முடியாமல் 5 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது...

கூடவே, ஈஷா யோகா மையத்தின் உள்ளே தகன மேடை ஒன்று இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது பகீர் கிளப்பியது...

இதனை அகற்ற வேண்டும் என, பக்கத்து நிலத்துக்காரர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செயல்பாட்டில் இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்...

ஈஷா நிறுவனத்தில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் மீது, உள்ளூர் பள்ளி முதல்வர் பாலியல் புகார் அளித்தார் எனவும், 2021 இல் யோகா பயிற்சிக்காக கோவை ஈஷா மையத்திற்கு வந்தபோது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் புகார் அளித்ததாகவும் தெரிவித்திருக்கின்றனர்..

இதில், பாலியல் வன்கொடுமை புகாரளித்த பெண், குற்றம் சாட்டப்பட்டவரை விசாரிக்கும் முன்னே புகாரை வாபஸ் பெற்றதாகவும் தெரிவித்துள்ளனர்...

மேலும் ஈஷா கிளினிக்கில் காலாவதியான மருந்துகளும், தகுதியற்ற ஊழியர்களும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்ட நிலையில், ஈஷா சமையலறையில் இருந்து உணவு மாதிரிகளை எடுக்க முடியவில்லை எனவும் குறிப்பிட்டிருந்தனர்..

இந்நிலையில், தீர்ப்பளித்த நீதிபதிகள்... இரு பெண்களும் தங்களின் சுய விருப்பத்தின்பேரில் ஈஷா மையத்தில் தங்கி இருப்பதால், அவர்களை மீட்டு தரக்கோரிய தந்தையின் ஆட்கொணர்வு மனுவை முடித்து வைத்தனர்...

மேலும், இந்த உத்தரவு ஆட்கொணர்வு வழக்குக்கு மட்டுமே பொருந்தும் எனவும், ஈஷா மையம் மீதான பிற குற்ற வழக்குகளை விசாரிக்க எந்தவொரு தடையும் இல்லையென உத்தரவிட்ட நீதிபதிகள், ஈஷா மையத்தில்.. பணியிட பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் விசாகா கமிட்டு அமைக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருக்கின்றனர்...


Next Story

மேலும் செய்திகள்