மண்ணில் உருண்டது மத்திய கிழக்கின் பெரும் தலை.. ஈரான் ஈரக்குலை நடுங்கவிட்டு ரசித்த இஸ்ரேல்

x

காசாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பை அழிக்கும் நோக்கோடு லெபனானில் இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், தெற்கு லெபனானில் ஹிஸ்பொல்லா ஏவுகணைப் பிரிவின் தளபதி முஹம்மது அலி இஸ்மாயில் மற்றும் துணைத் தளபதி ஹுசைன் அஹ்மத் இஸ்மாயில் ஆகியோர் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலி இஸ்மாயில் இஸ்ரேலுக்கு எதிராக பல பயங்கரவாத தாக்குதல்களை வழிநடத்தியவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஹிஸ்புல்லாவின் ஏவுகணை மற்றும் ராக்கெட் பிரிவின் உயர் தளபதி இப்ராஹிம் முஹம்மது கபிசி உள்பட பல உயர்மட்டத் தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்