எனக்கே விபூதி அடிக்க பாத்தல்ல..! - ஐபிஎஸ் அதிகாரி போல ID.. - ஆசாமி பகீர்...

x

சென்னையில், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக உள்ள ஐபிஎஸ் அதிகாரி, சுதாகர். இவர் பெயரில் முகநூல் கணக்கை தொடங்கிய மர்மநபர்கள், சுதாகரின் முகநூல் நண்பர்களிடம் சுதாகர் போன்றே சாட்(chat) செய்துள்ளனர். அதில், "தனது, சிஆர்பிஎஃப்-ல் பணிபுரியும் நண்பர், பணியிட மாறுதல் அடைகிறார்... அவரது வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களை, கம்மியான விலைக்கு விற்கிறார்... தேவை இருப்பின் வாங்கிக்கொள்ளலாம்..." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த சி.ஆர்.பி.எஃப். அதிகாரியின் மொபைல் எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பொருட்களை வாங்குவதற்காக சுதாகரின் முகநூல் நண்பர்கள், அந்த மொபைல் எண்ணை தொடர்பு கொண்டனர். அப்போது, தன்னை சி.ஆர்.பி.எஃப் வீரராக அறிமுகப்படுத்திக்கொண்ட ஒரு நபர், சில பொருட்களின் புகைப்படங்களை வாட்ஸ் ஆப்பில் அனுப்பி, பணத்தை அனுப்பினால்தான், பொருட்கள் கைக்கு வரும் என்று கறாராக கூறியுள்ளார். இதுகுறித்து, ஐபிஎஸ் அதிகாரி சுதாகரை போனில் தொடர்புகொண்டு, அவரது முகநூல் நண்பர்கள் முறையிட்டனர். அப்போதே, இது மோசடி முயற்சி என்பது அவர்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்